பிரித்தானியாவின் 10 மிக முக்கிய அமைச்சர்கள் இவர்கள் தான்- புது விவரங்கள் இதோ !

பிரித்தானியாவின் 10 மிக முக்கிய அமைச்சர்கள் இவர்கள் தான்- புது விவரங்கள் இதோ !

கடந்த ஜூலை 4ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் லேபர் கட்சி, 412 இடங்களை கைப்பற்றி பெரும் வெற்றியடைந்துள்ளது. லேபர் கட்சியின் தலைவர் கியர் ஸ்டாமர், தற்போது பல அமைச்சர்களை நியமித்துள்ளார். இதில் மிக முக்கியமான 10 அமைச்சர்களின் பட்டியலை இங்கே தருகிறோம்.

athirvurachel reeves MP இவர் தான் முதல் பெண் திறைசேரி அமைச்சர். கடந்த 700 வருடங்களாக எந்த ஒரு பெண்ணும் பிரித்தானியாவில் நிதி அமைச்சராக இருந்ததே இல்லை.

 

 

 

 

 

athirvuDavid Lammy MP இவர் வெளிநாட்டு அமைச்சர் அத்தோடு காமன் வெலத் நாடுகளின் அமைச்சரும் ஆவார்.

 

 

 

 

 

 

athirvuyvette cooper MP இவர் உள்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். ஹோம் ஆபிஸ் விவகார அமைச்சர்,

 

 

 

 

 

athirvuJohn Healey MP இவர் பிரித்தானியவின் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ளார். மிகவும் அனுபவம் வாய்ந்த ஒருவர்.

 

 

 

 

 

athirvuWes Streeting MP இவர் பிரித்தானியவின் சுகாதரத் துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ளார். அவர் அதற்கான கல்வியையும் கற்றுள்ளார் என்பது சிறப்பு.

 

 

 

 

 

athirvuBridget Phillipson MP இவர் பிரித்தானியவின் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ளார். ஆக்ஸ்பேட்டில் கல்வி கற்றவர், திறன் சார் புலமை பெற்றவர்.

 

 

 

 

 

athirvuLouise Haigh MP இவர் பிரித்தானியவின் போக்குவரத்துத் துறை அமைச்சர். இனி அரசாங்கமே போக்குவரத்தை கவனிக்க உள்ளதாம். தனியார் மயப் படுத்தலை லேபர் அரசு விரும்பவில்லை.

 

 

 

 

 

athirvuEd Miliband MP -ஒரு காலத்தில் லேபர் கட்சியின் தலைவராக இருந்தவர் எட் மிலபான். அவருடைய சொந்த தம்பி டேவிட் மிலபான், லேபர் கட்சித் தலைவருக்குப் போட்டி இடுகையில். இடையே புகுந்து தானும் போட்டியிட்டு, சொதப்பியவர். இதனால் 2009ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சராக இருந்த டேவிட் மிலபான், அண்ணாவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு. அரசியலே வேண்டாம் என்று அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார். அவர் தமிழர்களின் உற்ற நண்பர், 2009 தமிழர்கள் வீதிக்கு இறங்கிய வேளையில், வரலாற்றில் முதல் தடவையாக ஐ.நா பாதுகாப்பு சபையில், முள்ளிவாய்க்காலுக்கு மேல் இலங்கை விமானம் பறக்கக் கூடாது என்ற தடையை கொண்டு வர பிரேரணை சமர்ப்பித்தார். ஆனால் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பாவித்து, அந்த தீர்மானத்தை ரத்துச் செய்தது பலரும் அறியாத விடையம். தற்போது அமெரிக்காவில் இருக்கும் டேவிட் மிலபானின் அண்ணா தான் இந்த எட் மிலபான். இவர் தற்போது எரி சக்த்தி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

athirvuLiz Kendall MP இவர் வேலை வாய்ப்பு மற்றும் பென்ஷன் துறை அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

 

 

 

 

 

 

athirvuJonathan Reynolds MP இவர் வணிகத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவர்கள் நியமனங்கள் அனைத்தும் மன்னர் சார்ளசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் தரும் பட்சத்தில் இவர்கள் கடமையை புரிய ஆரம்பிப்பார்கள்.