1996 தொடக்கம் தமிழர்களோடு நிற்கும் ஜெருமி கோர்பினை நாம் எவ்வாறு மறக்க முடியும் ? ஏன் ?

1996 தொடக்கம் தமிழர்களோடு நிற்கும் ஜெருமி கோர்பினை நாம் எவ்வாறு மறக்க முடியும் ? ஏன் ?

பிரித்தானிய அரசியலில் பெரும் மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. முன்னரே எதிர்வு கூறியது போல, லேபர் கட்சி பெரும் வெற்றியை அடைந்துள்ளது. ஏன் என்றால் கான்சர் வேட்டிவ் கட்சி மீது மக்கள் வெறுப்புக் கொண்டுள்ளார்கள். உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் எடுத்துக் கொண்டால், கொரோனா பேரிடருக்குப் பின்னர், ஆழும் கட்சி, தேர்தலில் தோற்று எதிர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளதைப் பார்கலாம். அந்த வகையில் தற்போது லேபர் கட்சி பிரித்தானியாவில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது என்று தான் கூறவேண்டும். அதாவது லேபர் அலை ஒன்று வீசியுள்ளது.

முன்னர் லேபர் கட்சியின் தலைவராக இருந்த ஜெருமி கோர்பின், தமிழர்களின் உற்ற நண்பராக இருந்தார். 2009ம் ஆண்டு ஈழத் தமிழர்கள் நடத்திய அனைத்து ஊர்வலங்களிலும், போராட்டங்களிலும் பங்கு பற்றிய ஒரே நபர் ஜெருமி கோர்பின். அவர் லேபர் கட்சியின் தலைவராக இருந்த வேளை பாலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். ஆனால் பிரிட்டனில் மிகப் பலமாக இருக்கும் யூத இனம், உடனே அவருக்கு எதிராக பல நடவடிக்கையில் ஈடுபட்டு. பெரும் பணத்தை இறைத்து, ஜெருமி கோர்பினை, லேபர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அகற்றியது. அதற்காக யூத சமூகம் 170 லேபர் MPக்களை விலைக்கு வாங்கியதாக செய்திகள் பரவியது.

லண்டனில் இயங்கும் Tஏஸோ சூப்பர் மார்கெட் தொடக்கம் பல நிறுவனங்களை யூதர்களே இயக்கி வருகிறார்கள். அத்தோடு பிரித்தானிய அரசியலில் யூதர்கள் பெரும் செல்வாக்கு செலுத்தி வருகிறார்கள். ஆனால் இவை எதனையும் கண்டு ஜெருமி கோர்பின் துவண்டு போகவில்லை. நடந்த தேர்தலில் அவர் சுயேட்சையாக போட்டியிட்டு, லேபர் கட்சி, கான்சர் வேட்டிவ் கட்சி மற்றும் லிபரல் கட்சியை விழுத்தி, பெரும் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இதனை பிரிட்டன் மீடியாக்கள் இருட்டடிப்புச் செய்துள்ளது.

தற்போது தமிழர் தரப்பு லேபர் கட்ச்சி சார்பாக மாறியுள்ளது. பிரிட்டனில் இயங்கி வரும் பல அமைப்புகள் , தாம் லேபர் கட்சி சார்பானவர்கள் என்று தம்மை இனம் காட்டி வருகிறது. ஆனால் உண்மையில் எமக்கு உதவிய ஜெருமி கோர்பினை தமிழர்கள் மறந்து விட்டார்கள். இது தான் எமது இனத்தின் சாபக் கேடு. எங்கே அதிகாரம் உள்ளதோ அங்கே ஒட்டிக் கொள்கிறர்கள். ஆனால் கொள்கைப் பிடிப்பு இல்லை. எனவே இன் நிலையில், நாம் ஜெருமி கோர்பினை மறக்க கூடாது. அவரையும் எமது பாதையில் இணைத்துக் கொள்வது நல்லது.