விஜய்யின் The GOAT படத்தின் எதிர்பார்ப்பை எகிறவைத்த வெங்கட்பிரபுவின் பதிவு!

விஜய்யின் The GOAT படத்தின் எதிர்பார்ப்பை எகிறவைத்த வெங்கட்பிரபுவின் பதிவு!

விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. தற்போது ஐதராபாத்தில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இப்போது சென்னை கோவளம் பகுதியில் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இப்போது இயக்குனர் வெங்கட்பிரபு படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதனால் அந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.