மே-18க்கு கூட்டம் சேர்க்க நடனம் ? உப்புமா கம்பெனி காட்டிய பெரும் மாயாஜாலம் இது தான்

மே-18க்கு கூட்டம் சேர்க்க நடனம் ? உப்புமா கம்பெனி காட்டிய பெரும் மாயாஜாலம் இது தான்

மே 18 என்பது எமது மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப் பட்ட நாளை, ஒரு மனிதப் படுகொலையை மற்றும் போர் குற்றத்தை உலகிற்கு காட்ட செய்யப்படும் நிகழ்வு. வழமை போல, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC ), பாராளுமன்றம் முன்பாக நினைவேந்தல் நிகழ்வை நடத்தியது. இதேவேளை BTF என்று அழைக்கப்படும் அமைப்பு, ரவல்கர் சதுக்கத்தில், தனியான ஒரு நிகழ்வை நடத்தியது. இந்தக் குழுவின் நிகழ்வுக்கு மக்கள் அதிகம் அவந்து கலந்துகொள்ள மாட்டார்கள் என்பது, அவர்களுக்கே(BTF) நன்றாகத் தெரியும். இதனால் இவர்கள் செய்த வேலை தான் மிகவும் கவலை தரும் வகையில் உள்ளது என்கிறார்கள் இன் நிகழ்வில் கலந்து கொண்ட சிலர். இவர்கள் கூறிய உண்மை விடையத்தைத் தான் நாம் இங்கே தருகிறோம். “”இது அதிர்வு இணையத்தின் கருத்து அல்ல””.

மே18 அன்று, சுமார் 75 தமிழ் பெண் பிள்ளைகளை பிடித்து, ரவல்கர் சதுக்கத்தில் நடனம் ஆட விட்டுள்ளார்கள் இந்த BTF என்ற அமைப்பினர். இந்தக் குளிரில் வெறும் காலில் அவர்கள் நடனமாடியுள்ளார்கள். 75 பிள்ளைகளை நடனம் ஆட விட்டால், அவர்களது அப்பா, அம்மா, தம்பி அக்கா, குடும்பத்தினர் என்று ஒரு 200 பேர் வருவார்கள் இல்லையா ? இதுவே இவர்களின் நோக்கமாக இருந்துள்ளதே தவிர, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அல்ல. ஆதாவது எப்படி ஆட்களை சேர்ப்பது என்று திட்டம் போட்டு இருக்கிறார்கள். ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட்ட ஒரு தினத்தில், நடனம் ஆடுவது என்பது ஏற்புடையதா ?

அதிலும் ஒரு வெள்ளை இன இளைஞர் வந்து கேட்க்கிறார், இது என்ன நடன நிகழ்வா என்று ? எந்தனை நடன நிகழ்வு இருக்கும் ? என்று கேட்க்கிறார்கள்.  (அதாவது அந்த வெள்ளை இளைஞர் ஜாலியாக நடனத்தைப் பார்க்க இப்படி எல்லாம் கேள்வி கேட்க்கிறார்). நாம் எதனை நோக்கிச் செல்கிறோம் ? எங்கே செல்கிறோம் ? என்றே தெரியாமல் எழுந்தடி மேனியில் செல்வதே இந்த BTF குழுவுக்கு வெலையாகிப் போய்விட்டது. இல்லை தெரியாமல் தான் கேட்க்கிறேன், ஒரு இன அழிப்பு நிகழ்வில், நடனம் ஆட முடியுமா ? அது எங்கள் கலாச்சாரம் தானே என்று வாதிட்டாலும். இது என்ன கலாச்சார நிகழ்வா என்ற கேள்விகள் எழுகிறது அல்லவா ? என்று மனம் நொந்து ஒரு தமிழ் செயல்பாட்டாளர், கூறியிருக்கிறார்.

எந்த ஒரு இனம் இப்படியான வேலையைச் செய்யும் ? எண்ணிப் பாருங்கள் ? பல மாதங்களாக பாலஸ்தீனர்கள் போராடி வருகிறார்கள். அவர்கள் என்ன பெண்களை அழைத்து வந்து பாலஸ்தீன நடனம் ஆடுகிறார்களா ? இல்லையே !  ..பெற்றோர்களே இனியாவது யோசனை செய்து முடிவை எடுங்கள். உங்கள் பிள்ளைகள், ஏதாவது ஒரு நிகழ்வில் ஆடினால் போதும் என்று நினைக்க வேண்டாம்.  இடம் பொருள் ஏவல் என்பது முக்கியம். எமது பெண்கள், ஒரு காட்சிப் பொருள் அல்ல. நடனம் என்பது கலை அதனை எங்கே செய்கிறோம் ? எதற்காகச் செய்கிறோம் ? ஏன் செய்கிறோம் என்ற புரிதல் இருக்க வேண்டும்.

அன்பு
அன்புச் செழியன் Blogspotடில் இருந்து