ஒரு வீடு இரண்டு பெண்கள் – ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் விளம்பரம்

இந்த செய்தியை பகிருங்கள்

ஆன்லைன் மூலமாக பாலியல் தொழில் செய்வதாக சொல்லி இரண்டு பேரிடம் நகை, பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இது போல் பலரில் மோசடி செய்திருப்பது தெரியவந்ததால் போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி பெரிய தெருவை சேர்ந்தவர் இம்ரான். இவர் பெண்களை வைத்து ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் செய்து வருவதாகவும் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் என்றும் விளம்பரப்படுத்தி இருக்கிறார்.

இந்த ஆன்லைன் விளம்பரத்தை பார்த்த இரண்டு நபர்கள் இம்ரானை தொடர்பு கொண்டு இருக்கிறார்கள். அப்போது காட்டாங்குளத்தூர் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு அந்த இரண்டு பேரையும் வரவழைத்திருக்கிறார்.

இம்ரானின் பேச்சை நம்பி அந்த இரண்டு பேரும் அங்கு சென்று இருக்கிறார்கள். அவர்களை இம்ரான் கடுமையாக தாக்கியிருக்கிறார். தாக்குதலுக்கு உண்டாகி கிடந்தவர்களிடம் இருந்து 4000 ரூபாய் பணம் மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அனுப்பி இருக்கிறார்.

பாதிக்கப்பட்டவர்கள் மறைமலைநகர் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணையில் தான், இம்ரான்கான் இது போல் ஏற்கனவே பல பேரை ஏமாற்றி பணம் பறித்து வந்தது தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து இம்ரானை பிடிக்க அந்த வீட்டை ரகசியமாக நோட்டமிட்டு வந்த போலீசார், சமயம் பார்த்து அவரை கைது செய்துள்ளனர்.

காட்டாங்குளத்தூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக சொல்லிக் கொண்டு பலரிடம் நகை , பணம் பறித்திருக்கிறார் என்று இம்ரான் மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us