ஆத்தாடி இத்தனை கோடியா? ” இந்தியன் 2″ படத்திற்கு ஷங்கர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஆத்தாடி இத்தனை கோடியா? ” இந்தியன் 2″ படத்திற்கு ஷங்கர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படைப்பாளியான இயக்குனர் சங்கர் பல்வேறு வெற்றி திரைப்படங்கள் இயக்கி பல கோடி லாபம் ஈட்டி தயாரிப்பாளர்களுக்கும் விநியோகத்திற்கும் பிரபலமான மற்றும் ராசியான இயக்குனராக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் 1993 ஆம் ஆண்டு ஜென்டில்மேன் திரைப்படத்தை இயக்கி முதன் முதலில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அவருக்கு பெயரும் புகழும் தேடி கொடுத்தது. அதை அடுத்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி தி பாய்ஸ் ,எந்திரன், நண்பன், ஐ ,2.2 என அவர் இயக்கிய அத்தனை படங்களும் முத்தான வெற்றி படங்களாக மாபெரும் வசூல் ஈட்டி சாதனை படைத்தது.

இது தவிர அவர் தயாரிப்பாளராகவும் பல திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். இந்நிலையில் கடைசியாக கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்திற்காக இயக்குனர் ஷங்கர் ரூ. 50 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியுள்ளது.