செல்போனில் ஆபாச படங்கள் பார்க்காவிட்டால் மார்க் குறைச்சுடுவேன் – மாணவியை மிரட்டி வந்த விடுதி காப்பாளர்

இந்த செய்தியை பகிருங்கள்

செல்போனில் ஆபாச படங்கள் பார்க்காவிட்டால் மார்க் குறைச்சு போட்டு விடுவேன் என்று சொல்லி மிரட்டி வந்தாலும் மாணவியும் அதற்கு பயந்து யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்தாலும், விடுதி காப்பாளரின் பாலியல் தொல்லை அதிகமாகவே உறவினரிடம் சொல்லி அழுதிருக்கிறார். அதன் மூலம் விடுதிக்கு காப்பாளர் கைது செய்யப்பட்டு ஐந்தாவது கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் மாவட்டம். அம்மாவட்டத்தில் தலச்சேரி பகுதியில் அரசு பெண்கள் பள்ளி மற்றும் விடுதி இயங்கி வருகிறது. மாணவி ஒருவர் அந்த விடுதியில் தங்கி இருந்து அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். விடுதியின் காப்பாளர் சூர்யகாந்த், பத்தாம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவியை நோட்டமிட்டு வந்திருக்கிறார்.

திடீரென்று ஒரு நாள் தனது அலுவலகத்திற்கு வருமாறு அழைத்திருக்கிறார் சூர்யகாந்த். விடுதி காப்பாளர் அழைக்கிறார் என்று அந்த மாணவியும் அவரது அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார். அப்போது மாணவியிடம் செல்போனில் ஆபாச படங்களை காட்டி இருக்கிறார். மாணவி அதை கண்டு அருவருப்பாக பார்த்துவிட்டு வெளியேற நினைத்திருக்கிறார்.

ஆபாச படங்களை பார்க்காவிட்டால் மார்க் குறைச்சு போட்டுவிடுவேன் என்று அதட்டலாக சொல்லவும், மாணவி சூர்யகாந்தின் செல்போனில் ஓடிய அந்த ஆபாச படத்தினை பார்த்திருக்கிறார். அப்போது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். மாணவி அழுதுகொண்டே, நான் போகணும் சார் என்று சொல்லிவிட்டு புறப்பட்டிருக்கிறார்.

அந்த மாணவி தேம்பித் தேம்பி அழுதிருக்கிறார். அப்போது அந்த விடுதி காப்பாளர், இதைப்பற்றி வெளியே யாரிடமும் சொன்னால் மார்க் குறைச்சு போட்டுடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்து போன இந்த மாணவி நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறார். இது சாதகமாக போய்விட்டதால் ஆனால் அந்த விடுதி காப்பாளரின் பாலியல் தொல்லை அதிகரிக்கவே, மன உளைச்சல் அதிகமாகி உறவினரிடம் சொல்லி அழுது இருக்கிறார் அந்த மாணவி.

அந்த உறவினர் மாணவியின் பெற்றோரிடம் சொல்ல, கொதித்தெழுந்த அவர்கள், உறவினர்களுடன் திரண்டு சென்று விடுதி காப்பாளர் சூர்யகாந்தை அடித்து உதைத்து இருக்கிறார்கள்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விடுதிக்காப்பாளர் சூரியகாந்தை மீட்டு கைது செய்து சென்றிருக்கிறார்கள். சூரியகாந்த் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர் . இது தொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது .

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தில் விசாரணைகள் முடிந்து தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சூரியகாந்த் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார் .


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us