பலகோடிகளை குவித்த வசூல்… லாபம் மட்டுமே இத்தனை கோடியா!

பலகோடிகளை குவித்த வசூல்… லாபம் மட்டுமே இத்தனை கோடியா!

பிரபல இயக்குனர் நாக் அஷ்வின் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக கிட்டத்தட்ட ரூ. 800 கோடி பட்ஜெட்டில் தயாராகி அண்மையில் வெளியான திரைப்படம் தான் “கல்கி 2898 AD”. இப்படத்தில் தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், பிரபாஸ் , கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் உலகம் முழுக்க கடந்த ஜூன் 27தேதி வெளியாகி பிரம்மாண்ட சாதனை படைத்து வருகிறது. திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வரும் இந்த திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் வசூல் மற்றும் லாபம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ரூ. 600 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ. 191 கோடி வசூலித்தது. 15 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 1000 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இதுவரை படம் ரூ. 125 கோடி லாபத்தை கொடுத்திருப்பதாக புதிய தகவல் வந்துள்ளது, அதோடு ஷேர் ரூ. 500 கோடியை எட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.