சீரியல் நடிகையாக இருந்து சினிமா நடிகையாக ப்ரொமோட் ஆகி பிரபலமானவர் தான் நடிகை வாணி போஜன். மாடல் அழகியான இவர் ஆஹா என்ற தொடரில் நடித்து அறிமுகமாகி தொடர்ந்து தெய்வமகள் சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார்.
சன் தொலைக்காட்சியில் ஒளி பரப்பான அந்த சீரியல் இல்ல தரிசிகளின் மனதை வெகுவாக கவர்ந்த சீரியலாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியலில் நடித்து வந்த இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. அத்துடன் ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய அளவில் பேமஸ் ஆனார்.
இதனிடையே சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருவார். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் செம ஸ்டைலிஷ் லுக்கில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதில் பார்க்க அப்படியே நயன்தாராவை போன்று இருப்பதாக நெட்டிசன்ஸ் எல்லோரும் கூறி வருகின்றனர்.