விடிய விடிய அப்படி பண்ணலன்னு அடிச்சான்…. காதல் தோல்வி குறித்து காஜல்!

விடிய விடிய அப்படி பண்ணலன்னு அடிச்சான்…. காதல் தோல்வி குறித்து காஜல்!

மிகவும் போல்டான நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சியமானவர் தான் நடிகை காஜல் பசுபதி. இவரை தெரியாதவர்கள் பெரும்பாலும் இருக்கவே முடியாது. சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது திரை பயணத்தை தொடங்கிய இவர் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலம் ஆனார்.

குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலமாகத்தான் காஜல் பசுபதி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி இருந்தார். இவர் பிரபல நடன இயக்குனரான சாண்டி மாஸ்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

இந்நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் தனது காதல் குறித்து காதல் பிரிவு குறித்தும் காதலன் குறித்தும் பேசி இருக்கும் காஜல் பசுபதி… “நான் நிறைய பேரை பொசசிவ் காரணமாக இழந்துள்ளேன் அதேபோல் தான் சாண்டியையும் பொசசீவ் காரணமாக பிரிந்தேன். பின்னர் மிகவும் பொசிசீவ் ஆக இருக்கக் கூடாது என்று நினைத்து ஒருவரை காதலித்து அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்தேன்.

ஆனால், என்னுடைய பிறந்தநாள் அன்று மற்றவர்களை காதலித்தது போல் ஏன் என்னை காதலிக்கவில்லை? எனக் கூறி என்னை விடிய விடிய அடித்தார். ஆனால், மறுநாள் காலையில் நான் அவரை அடித்ததாக பொதுவெளியில் எல்லோரிடமும் கூறினார். எனவே அக்கறையாக இருந்தாலும் தவறு இல்லை என்றாலும் தவறு இதுதான் வாழ்க்கை என சிரித்துக் கொண்டே கூறினார் காதல் பசுபதி.