சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அசரவைத்தவர் நடிகை மாளவிகா மோகனன். தொடர்ந்து தனுஷ் உடன் மாறன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக மார்க்கெட் இழந்து போனார்.
இதையடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் திரைப்படத்தில் மாளவிகா நடித்து வருகிறார். இப்படத்தில் பார்வதி மேனன், பசுபதி மற்றும் நடித்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மாளவிகா ஒரு ஷாக்கிங் தகவலை கூறியுள்ளார். அதாவது, ” நான் தங்கலான் படத்தில் நடித்துள்ள கதாபாத்திரத்திற்கு கண்களில் லென்ஸ் போட்டு நடிக்கவேண்டியதாக இருந்தது.
இதனால் எனக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. அதுபோல எனக்கு தோல் தொடர்பான பிரச்னை ஏற்பட்டது. இந்த பிரச்னையை சரி செய்ய படப்பிடிப்புக்கு மத்தியில் நான் மொத்தம் ஐந்து மருத்துவர்களைச் சந்தித்தேன்” என்று மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.