இளசுகளின் கனவுக் கன்னி மாளவிகா மோகனன் சொத்து மதிப்பு – எத்தனை கோடி தெரியுமா?

இளசுகளின் கனவுக் கன்னி மாளவிகா மோகனன் சொத்து மதிப்பு   – எத்தனை கோடி தெரியுமா?

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அசரவைத்தார்.

முதல் படத்திலே ரஜினியுடன் நடித்ததால் அந்த படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதன் பிறகு மாஸ்டர் திரைப்படம், மாறன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக மார்க்கெட் இழந்து போனார்.

இந்நிலையில் இன்று தனது 31 வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகை மாளவிகா மோகனின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. ஒரு படத்திற்கு ஒரு ஐந்து முதல் ஆறு கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகை மாளவிகா மோகனன். இது தவிர நிறைய விளம்பர படங்களிலும் நடித்து கணிசமான வருமானத்தை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் அவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ 16 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இதில் மாளவிகா Mercedes Ml 350 ரூ. 50 லட்சம், BMW ரூ. 2.60 கோடி, Audi Q7 ரூ. 81 லட்சம் மதிப்புள்ள கார்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மாளவிகா மோகனன், malavika mohanan , Cinema news , Actress news