ஜெயிலர் 2″ படத்திற்கு நெல்சன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

ஜெயிலர் 2″ படத்திற்கு நெல்சன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து நெல்சன் திலீப்குமார் கடந்த ஆண்டு இயக்கி வெளிவந்த திரைப்படம் தான் ‘ஜெய்லர்’. சன் பிச்சர் நிறுவனம் தயாரித்து வெளிவந்த இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் மோகன்லால் , ஜாக்கி ஷெராஃப் , சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள் .

இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக பாக்ஸ் ஆபிஸ் அளவில் சூப்பர் ஹிட் அடித்தது. ரூ. 200 கோடி பட்ஜெட் பொருட்செலவில் உருவாகிய இந்த திரைப்படம் கிட்டத்தட்ட ரூ . 600 முதல் ரூ. 650 கோடி வரை வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது .

இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை இயக்க இயக்குனர் நெல்சன் திலிப் குமார் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது. அதாவது இப்படத்தை இயக்க நெல்சனுக்கு ரூ.60 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு குறுகிய காலத்திலேயே இவ்வளவு பெரிய வளர்ச்சி எட்டி இருக்கும் நெல்சனை பார்த்து எல்லோரும் வியப்படைந்து விட்டனர்.

ஜெயிலர் 2 , இயக்குனர் நெல்சன் திலீப் குமார், nelson dileep kumar , jailer 2,