கட்டத்துறை மகனுக்கு களைகட்டும் கல்யாணம் – ஹல்தி கொண்டாட்ட வீடியோ!

கட்டத்துறை மகனுக்கு களைகட்டும் கல்யாணம் – ஹல்தி கொண்டாட்ட வீடியோ!

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்தான் ஷாருக். இவரது தந்தை ரியாஸ்கான் தமிழ் திரைப்படங்களில் பல்வேறு படங்களுக்கு வில்லனாக நடித்திருக்கிறார்.

மேலும் சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். ஷாரிக்கின் தாயார் நடிகை கமலா காமேஷின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாரிக்கின் தாயான உமா குக் வித் கோமாளி சீசன் ஒன் நிகழ்ச்சிகள் கூட பங்கேற்று இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மகன் ஷாரிக் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் திடீரென அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இவர்களுக்கு வருகிற செப்டம்பர் 8ம் தேதி அவர்களின் திருமணம் சென்னையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. 29 வயதாகும் ஷாரிக்கிற்கு ஜெனிபர் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளது இந்நிலையில் இவர்களின் ஹல்தி பங்க்ஷன் நடைபெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

ஷாரிக் , பிக்பாஸ் ஷாரிக் , shariq riyaz khan , shariq riyaz khan wedding