Pay per mile ROAD TAX திட்டத்தை பிரிட்டன் அறிமுகப்படுத்த உள்ளதா ? எலக்ரிக் கார்களுக்கும் ஆப்பு தான் !

Pay per mile ROAD TAX திட்டத்தை பிரிட்டன் அறிமுகப்படுத்த உள்ளதா ? எலக்ரிக் கார்களுக்கும் ஆப்பு தான் !

எலக்ரின் கார்களை(மின்சர கார்களை) வாங்கிய நபர்கள், அட ஏனடா இதனை வாங்கித் தொலைத்தோம் என்று தலையில் கையை வைக்கிறார்கள். ஒரு விடையம் மின்சார கட்டணம் தலைக்கு மேல் எகிறியதால். பெற்றோல் அடித்து காரை ஓட்டுவது லாபம் என்றாகிவிட்டது. போதாக் குறைக்கு காரின் பற்றரி பழுதாகினால் சுமார் 7,000 பவுண்டுகள் வரை செலவாகும், பல இன்சூரன்ஸ் கம்பெனிகள் பற்றரிகளை கவர் செய்வது இல்லை. இன் நிலையில் எலக்ரிக் கார்களை வைத்திருக்கும் நபர்களுக்கு ஒரே ஒரு சின்ன லாபம் Road Tax கட்டத் தேவை இல்லை என்பது தான்.

தற்போது அதற்கும் வைக்கப் போகிறார்கள் ஆப்பு. அதாவது பிரித்தானியாவை முன்னர் ஆட்சிசெய்த கான்சர் வேட்டிவ் கட்சி, ஒரு திட்டத்தை கொண்டு வர இருந்ததாம். அது என்னவென்றால், ஒரு கார் சுமார் ஆண்டுக்கு எத்தனை ஆயிரம் KM செய்திறதோ , அதற்கு தகுந்தால் போல றோட் டாக்ஸ் போடுவது என்று. அது எல்லாக் கார்களுக்கும் தான். இதில் பெற்றோல், மின்சார கார் என்ற பாகுபாடு கிடையாது. ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் லேபர் கட்சி வென்று ஆட்சியை அமைத்துள்ள நிலையில்.

இந்த திட்டத்தை மேற்கொள்வதா ? இல்லையா என்ற விவாதம் தற்போது இடம்பெற்று வருவதாக பாராளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை இது சட்டமாக மாறினால், மின்சார கார்களை வைத்திருக்கும் நபர்களுக்கு பேரிடி தான். அது போக பிரித்தானியா மற்றும் ஏனைய ஐரோப்பாவில் மின்சார கார்களை கொள்வனவு செய்வது வெகுவாகக் குறைவடைந்து வருகிறது. இதுவும் வந்தால் அதோ கதி தான்.