அமெரிக்காவின் முன் நாள் ஜனாதிபதி டொனால் ரம், தற்போது ஜனாதிபதி தேர்தலில் நிற்கிறார். இன் நிலையில் அவருக்கு எதிரான பல விமர்சனங்கள் நாளுக்கு நாள் வெளியாகிய வண்ணம் உள்ளது. அந்த வகையில், அவரின் முன் நாள் ஊடகச் செயலாளர், ஸ்டெபினி கரிஷ்காம் ரம்புக்கு எதிராக பல கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவர் கூறும் விடையங்கள் அனைத்தும், ரம் ஆட்சியில் இருந்தவேளை இடம்பெற்ற சம்பவங்கள் என்பதால், மக்கள் மத்தியில் இந்தப் பரப்புரை ஊடுருவியுள்ளது.
காரணம் தான் என்ன கூறவேண்டும் என்பதனை, தனது ஊடகச் செயலாளரிடம் ரம் தெரிவிப்பது வழக்கம். அப்படியான சந்தர்பம் ஒன்றில் வைத்தியசாலைக்குச் சென்ற ரம், அங்கே உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் சிலரை , ICU வாட்டில் பார்த்துள்ளார். அவர்கள் நிலை பற்றி கேலியாக பேசியதோடு, இவர்கள் இருந்தால் என்ன ? இறந்தால் என்ன என்று பகிடியாகப் பேசியுள்ளார்.
இது போக 2019ல் ரம்புக்காக போராடிய மக்களை, கூழ அவர் இழிவாகப் பேசியுள்ளார் என்று, ரம்பின் ஊடகச் செயலாளர் பல விடையங்களை மக்கள் மத்தியில் புட்டு புட்டு வைத்துள்ளார். இது ரம்பின் செல்வாக்கை மேலும் பின்னடைய வைத்துள்ளது. சரியான சந்தர்பத்தில் கமலா ஹரிசின் , ஆதரவாளர்கள் இவரை மக்கள் மத்தியில் களம் இறக்கியுள்ளார்கள்.