றொமேனியா நாடு பற்றியோட் மிசைல்களை உக்ரைனுக்கு வழங்க உள்ளது- வான் பாதுகாப்பு

றொமேனியா நாடு பற்றியோட் மிசைல்களை உக்ரைனுக்கு வழங்க உள்ளது- வான் பாதுகாப்பு

ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளும், உக்ரைனுக்கு பல ஆயுதங்களை வழங்கி உதவி வருகிறது. இந்த நிலையில் றொமேனியா நாடு தன்னிடம் உள்ள, மிகவும் சக்த்திவாய்ந்த பற்றியோட் ஏவுகணை சிஸ்டத்தை, உக்ரைனுக்கு வழங்க முன்வந்துள்ளது. குறித்த பற்றியோட் ஏவுகணை சிஸ்டத்தைப் பொருத்தினால், அது மிகப் பெரிய வான் பாதுகாப்பு கட்டமைப்பாக மாறும். உக்ரைன் நாட்டுக்குள் வரும் அனைத்து எதிரிகளின் விமானத்தையும் அது சுட்டு வீழ்த்தும்.

அது போக எதிரி நாடு அனுப்பும் ஆளில்லா விமானங்களையும், ஏவுகணைகளையும் இந்த பற்றியோட் சிஸ்டம் தாக்கி அழிக்க வல்லவை. இது இவ்வாறு இருக்க, உக்ரைன் ராணுவத்தின் ஒரு பகுதி, ரஷ்யாவின் கேஷ் நகரில் ஊடுருவி முன்னேறி வருகிறது. இதனால் ரஷ்யாவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ரஷ்ய அதிபர் விலாடுமில் புட்டின் அவர்கள், ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடைசி கட்ட நடவடிக்கையாக தன்னிடம் உள்ள அணு ஆயுதங்கள் சிலவற்றை கிரீமியாவுக்கு நகர்த்தி, ஏதோ உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஒரு பூச்சாண்டி காட்டி இருந்தார் புட்டின். ஆனால் அதுவும் தற்போது பலிக்கவில்லை. இன் நிலையில் சிலவேளைகளில் அவர் யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.