Source : Undercover Kremlin operatives even made a four-man underground bunker packed with bedding, weapons and supplies in the UK to prepare for the feared global conflict, he added.
பிரித்தானியாவில் உள்ள சில ராணுவத் தளங்களுக்கு அருகாமையில், ஆயுதங்கள், நச்சு வாயுக்கள், மற்றும் சில வகையான வெடி குண்டுகளைக் கொண்டு வந்து ரஷ்ய உளவாளிகள் புதைத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இவை 1980களில் இடம்பெற்றதாக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் கூறி பெரும் குண்டைப் போட்டுள்ளார். தமக்கு அந்த நாட்களில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் இதனை தெரிவிப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
பிரிட்டனில் சில ரஷ்ய உளவாளிகள் சிக்கியதாகவும், அவர்களை விசாரணை செய்தவேளை சில தகவல்களை தாம் கண்டு பிடித்ததாகச் சொல்லும் அந்த அதிகாரி. அவர்கள் எந்த இடத்தில் புதைத்தார்கள் என்பதனை இறுதிவரை சொல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் ரஷ்யாவில் இருந்து பலவகையான ஆயுதங்களை கடத்தி வந்து பிரிட்டன் மண்ணில் புதைத்துள்ளார்கள் என்றும். அது எந்த இடங்களில் புதைக்கப்பட்டுள்ளது என்பது ரஷ்ய அரசுக்குத் தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.
வெடி குண்டுகள் செயல் இழந்து போனாலும் நச்சு வாயு குண்டுகள் இன்னும் ஆபத்தானவை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.