இப்படி இருந்து பின்னர் பாடி பில்டர் ஆகி 19 வயதில் heart attackக்கால் மரணமான பவலக் என்னும் இளைஞர் !

இப்படி இருந்து பின்னர் பாடி பில்டர் ஆகி 19 வயதில் heart attackக்கால் மரணமான பவலக் என்னும் இளைஞர் !

 

வெறும் 19 வயதே நிரம்பிய பவலக் என்னும் இளைஞர், தனது வீட்டில் இறந்து கிடந்த விடையம் பிரேசில் நாட்டையே உலுக்கியுள்ளது. சிறு வயதில் மிகவும் குண்டாக இருந்த பவலக்கை பார்த்து கேலி செய்யாத நபர்களே கிடையாது எனலாம். பாடசாலையில், ஷாப்பிங் காம்பிளக்ஸ்சில், நீச்சல் தடாகத்தில் என்று அனைத்து இடங்களிலும் பவலக் கிண்டல்களுக்கு ஆளானார். இதனால் தனது உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று அவர் உறுதி எடுத்தார்.

படிப்படியாக உணவுப் பழக்கத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த அவர், ஜிம் சென்று பல மணி நேரம் பல வேர்கவுட்டை செய்து உடல் எடையைக் குறைத்தது மட்டுமல்லாது. கட்டழகான உடல் வாகைப் பெற்று , சிக்ஸ் பேக்ஸ்சையும் பெற்றுக் கொண்டார். இதனால் அவர் ஒரு மாடலாகவும் மாறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பவலக் தனது சொந்த ஊரில் ஒரு புகழ்பெற்ற நபராக இருந்து வந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று அவர் இல்லத்தில் இறந்து கிடந்தார்.

அவசரமாக அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றார்கள். ஆனால் அவர் உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டது என்று மருத்துவர்கள் அறிவித்ததோடு. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். 19 வயதில் அதுவும் கட்டுமஸ்தான உடல் வாகு, உடல்பயிற்ச்சி செய்யும் இவருக்கு மாரடைப்பா ? என்று பலரும் ஏங்கிப் போய் உள்ளார்கள். ஆனால் தசைகளை வளர்க்க இவர் பாவித்த புரோட்டின் பவுடர்கள், சில வகையான மருந்துகள், இந்த மாரடைப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். எனவே இவ்வாறு உடல் கட்டை ஏற்றுகிறோம் என்று ஜிம் சென்று, பின்னர் புரோட்டின் பவுடர் , அந்த மாத்திரை இந்த மாத்திரை என்று உட்கொள்ளும் நபர்களே, மிகவும் ஜாக்கிரதை.