இலங்கையின் பொருளாதார நிலை சற்று முன்னேறி வருவது போன்ற ஒரு தோற்றப்பாடு நிலவி வந்தது. ரணில் அரசு இலங்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதாக பலராலும் பேசப்பட்டு வந்த நிலையில். இன்னும் சில தினங்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இலங்கையின் ரூபா மீண்டும் அதள பாதாளம் நோக்கிச் செல்ல ஆரம்பித்து விட்டது. பிரித்தானியப் பவுண்டுடன் ஒப்பிடும் போது, 404 ரூபாவாக மாறியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் 377 தொடக்கம் 380 ரூபா என தனது நிலையை இலங்கை நாணயம் தக்க வைத்து இருந்தது. ஆனால் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலை தான் இதற்கு காரணம் என, கூறப்படுகிறது. இலங்கையின் அரசியல் ஒரு ஸ்திரமற்ற நிலையில் உள்ளது. நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் அல்லது அனுராவே வெல்ல வாய்ப்புகள் உள்ளதாகவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இன் நிலையில் தான் இலங்கை நாணயம் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் இலங்கைக்கு பணத்தை அனுப்ப இது சரியான தருணமாக இருக்கும்.