லெபனான் ஈரான் இரண்டு நாடுகளும் இணைந்து இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்த திட்டம் !

லெபனான் ஈரான் இரண்டு நாடுகளும் இணைந்து இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்த திட்டம் !

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கம் மீது, இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது போலவே ஈரான் நாட்டின் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சொல்லியும், இஸ்ரேல் அதிபர் நித்தின் யாஹூ கேட்டபாடாக இல்லை. இன் நிலையில் அமெரிக்கா இஸ்ரேலை கை விடும் நிலை தோன்றக் கூடும் என்று எதிர்வு கூறப்படுகிறது. இது இவ்வாறு இருக்க,

ஈரான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் இணைந்து ஏக காலத்தில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்று செய்திகள் வெளியகியுள்ளது. இதேவேளை பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாசும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த பெரும் திட்டங்களை தீட்டி வருகிறது. தற்போதைய கால கட்டத்தில், லெபனான் மற்றும் ஈரான் போன்ற நாடுகள் இஸ்ரேல் மீது தன்னிச்சையாக தாக்குதல் எதனையும் நடத்துவது இல்லை. ஆனால் தொடர்ந்து இஸ்ரேல் மட்டும் தாக்குதல்களை நடத்தி வருவதோடு.

தமது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று கூறி, அரபு நாடுகளை தாக்கி வருகிறது. சில தினங்களுக்கு முன்னரே சுமார் 5,000 பேஜர்களை அது வெடிக்க வைத்தது. மேலும் சொல்லப் போனால் லெபனான் நாட்டில் உள்ள மக்கள், சாதாரண லேப்-டாம் முதல் கொண்டு எலக்ரானிக் சாதனங்களைப் பாவிக்க தற்போது அஞ்சி வருகிறார்கள்.