மட்டக் களப்பு மக்கள் மற்றும் யாழ் மக்கள் தமிழ் வேட்ப்பாளரை நிராகரித்தார்களா ?

மட்டக் களப்பு மக்கள் மற்றும் யாழ் மக்கள் தமிழ் வேட்ப்பாளரை நிராகரித்தார்களா ?

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களின் இந்த முடிவு மிகவும் அதிர்ச்சி தருகிறது. பல தமிழ் ரசியல் தலைவர்கள் கூறியதைக் கூட காதில் வாங்காமல், சஜித் மற்றும் ரணிலை ஆதரித்துள்ளார்கள் வட கிழக்கு தமிழர்கள். ஒரு வகையில் சஜித்திற்கு தமிழர் தரப்பில் விழுந்த வாக்கு எண்ணிக்கை, தென் இலங்கையில் அவர் அனுராவை எதிர்க்க மேலும் துணை புரிந்துள்ளது என்று தான் கூறவேண்டும், தமிழர்கள் ஏன் இந்த முடிவை எடுத்தார்கள் என்பது தெரியவில்லை !

யாழ் மற்றும் வன்னியில் சஜித் பிரேம தாசாவுக்கு அதிக அளவில் வாக்குகள் விழுந்துள்ளது. 2வது வாக்காக தமிழ் வேட்ப்பாளர் அரிய நேந்திரன் வந்துள்ளார். இது இவ்வாறு இருக்க, மட்டக் களப்பு உட்பட கிழக்கு மாகானம் இன்னும் படு கேவலமாக உள்ளது. அங்கே உள்ள தமிழர்கள் 8% சத விகிதமே தமிழ் வேட்ப்பாளரை ஆதரித்துள்ளார்கள். 42% விகிதமானவர்கள் சஜித் மற்றும் ரணிலை ஆதரித்துள்ளார்கள், என்பது மிகவும் அதிர்ச்சியான மற்றும் வேதனை தரும் விடையம்.

இந்த ஜனாதிபதி தேர்தலில், தமிழ் வேட்ப்பாளர் வெல்லப் போவது இல்லை என்பது ஊர் அறிந்த உண்மை. ஆனால் குறைந்த பட்சம் 2 லட்சம் வாக்குகளை அவர் பெற்றால், தமிழ் வேட்ப்பாளரான அரியநேந்திரனுக்கு சர்வதேச அளவில் ஒரு அங்கிகாரம் கிடைக்கும். அவர் ஐ.நா சபை சென்று கூட, பேச முடியும். ஆனால் அதனைக் கூட தமிழர்கள் செய்யவில்லை என்பது மிகவும் வருந்தத் தக்க விடையம். 4 லட்சத்தி 90,000 ஆயிரம் பேர் யாழில், வாக்களிக்க தகுதியானவர்கள், ஆனால் அவர்களில் பலர் சஜித் பிரம தாசவை ஆதரித்துள்ளார்கள்.