Source MSN News: Disaster for Putin as £38m Satan-2 ‘nuke’ explodes at launch site
ரஷ்யாவில் சைத்தான் 2 என்ற அணு குண்டு ஒன்று, தரைக்கு கீழே அதன் தளத்தில் வைத்து வெடித்துள்ளது என அமெரிக்க உளவுத்துறை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் உளவு சாட்டலைட் ஒன்று இந்த புகைப்படத்தை எடுத்துள்ளது. சுமார் 38M அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்த சைத்தான் 2 அணு குண்டு ஏவுகணை, ஏன் வெடித்து என்று தெரியவில்லை. இதேவேளை ரஷ்யா எந்த ஒரு ஒத்திகையிலும் ஈடுபடவில்லை. இதனை ஏவ முற்பட்டவேளை வெடித்ததா ? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.
11,000KM வரை பறந்து சென்று தாக்க வல்ல இந்த இந்த ஏவுகணை, திர வடிவில் கதிரியக்க பொருட்களைக் கொண்டது. இது வெடித்தால் பெரும் அழிவை ஏற்படுத்தும் என்று ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் நம்பி இருந்தார்கள். இன் நிலையில் தான் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் லோவோ என்னும் ராணுவத் தளத்தின் பக்கத்தில் எரிமலை கிடங்கு போல பெரும் வெடிப்பு ஒன்று தற்போது காணப்படுகிறது. இதனையே அமெரிக்க உளவு சாட்டலைட் படம் பிடித்துள்ளது.