இன்று ஜனாதிபதியாக பொறுப்பேற்க்க உள்ள அனுரா, தனது விசேட அதிகாரத்தைப் பாவித்து பாராளுமன்றத்தை கலைத்து புதுத் தேர்தல் ஒன்றை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. ஒருவர் இலங்கை ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு, 46 நாட்கள் கழித்து அவர் பாராளுமன்றத்தைக் கலைக்க அவருக்கு அதிகாரம் உள்ளது. எனவே இந்த அதிகாரத்தை அனுரா நிச்சயம் பாவிப்பார் என்று , ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்திற்கான தேர்தல் வெகு விரைவில் நடைபெறும். இதில் அனுராவின் JVP கட்சி ஆட்சியை பிடிக்கக் கூடும் என்றும் எதிர்வு கூறப்படுகிறது. இருப்பினும் சஜித் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் பலமாக உள்ள நிலையில், அனுரா மற்றும் சஜித் கட்சிகளுக்கு இடையே பலமான போட்டி ஒன்று நிலவும் என்றும் கூறப்படுகிறது.
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் அனுரா சில அதிரடி நடவடிக்கைகளில் இறங்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஊழல் பேர்வளிகள் சிலரை அவர் தாடலடியாக கைதுசெய்து சிறையில் அடைப்பார் என்றும் எதிர்பார்கப்படுகிறது.