தூத்துக்குடியில் பஞ்சர் கடை தொழிலாளி அடித்துக்கொலை!

இந்த செய்தியை பகிருங்கள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (47). இவருக்கு சங்கரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இவர் தூத்துக்குடி துறைமுக சாலையில் மீன்வளக் கல்லூரி அருகே பஞ்சர் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், நேற்று அதிகாலை கடையில் தலையில் ரத்த காயங்களுடன் கருப்பசாமி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள், தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன், ஏடிஎஸ்பி சந்தீப் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, தென்பாகம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் குட்டி என்கிற செல்லக்குட்டி என்பவர் கருப்பசாமியை அடித்துக் கொன்றது தெரியவந்தது. இதனை அடுத்து, செல்லகுட்டியை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us