இலங்கையில் புதிய கட்சி உதயம் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் ஐக்கிய ஜனநாயகக் குரல் (UDV)

இலங்கையில் புதிய கட்சி உதயம் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் ஐக்கிய ஜனநாயகக் குரல் (UDV)

இன்று இலங்கையில் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில், புதிய கட்சி ஒன்று உருவாகியுள்ளது. இதன் தொடக்க விழா தற்போது கொழும்பில் நடைபெற்று வரும் நிலையில், இக் கட்சிக்கு “ஐக்கிய ஜனநாயகக் குரல்”  (UDV)என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்சியில் தமிழர்கள், மற்றும் முஸ்லீம்கள் என அனைத்து இன மக்களும் இருப்பதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அவர் வழங்கியுள்ளார். இதில் ஊழல் அற்ற ஆட்சி, லஞ்ச ஒழிப்பு, தரமான மருத்துவ வசதி, வாழ்கைச் செலவை குறைப்பது என்பது போன்ற மிக முக்கியமான பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியானது மைக் சின்னத்தில், நடைபெறவுள்ள தேர்தலில் களம் இறங்கவுள்ளது. இது மக்களின் குரலாக இருக்கும் என்றும். இது நாள் வரை, அரசியல் வாதிகள் பேச பொது மக்கள் கேட்டார்கள். இனி பொது மக்கள் பேசட்டும் அரசியல்வாதிகள் அதனை புரிந்துகொள்ளவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  பேச முடியாமல் இருக்கும் மக்கள், இனி பேசலாம் என்று ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.