எனக்குபர்சனல் இந்த படம் ரொம்ப பிடிச்சிருக்கு! அமரன் திரைப்பட குழுவை அழைத்து வாழ்த்து சொல்லிய ரஜினிகாந்த், எல்லோரும் தியட்டல்ல போய் பாருங்க என்று சொன்னாரா?

எனக்குபர்சனல்  இந்த படம் ரொம்ப பிடிச்சிருக்கு! அமரன் திரைப்பட குழுவை அழைத்து வாழ்த்து சொல்லிய ரஜினிகாந்த், எல்லோரும் தியட்டல்ல போய் பாருங்க என்று சொன்னாரா?

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாக சினிமாவில் எத்தனை திரைப்படங்கள் வந்தாலும் அதில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நம் மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு வெளிவந்த படங்களிலேயே மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் என்றால் மகாராஜா மற்றும் வாழை திரைப்படங்கள்.

அதற்கு அடுத்த வரிசையில் இணைந்து இருக்கின்றது சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம். நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படம் இயக்கப்பட்டது.

இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். கமலஹாசனின் ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் கடந்த இரண்டு நாட்களாக திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது.

இப்படத்தைப் பார்த்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் படத்தை குறித்து புகழ்ந்து பேசி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு மனதார பாராட்டி இருக்கின்றார். நடிகர் ரஜினிகாந்த் நவம்பர் 1ம் தேதி அமரன் படத்தை பார்த்துவிட்டு படத்தின் தயாரிப்பாளரான உலகநாயகன் கமலஹாசனுக்கு போன் செய்து மனதார பாராட்டி இருக்கின்றார்.

இதையடுத்து இன்று அமரன் பட குழுவினரை நேரில் சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனதார பாராட்டினார். இது தொடர்பான வீடியோ ஒன்றை ராஜ்கமல் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் அவர் தெரிவித்திருந்ததாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தை நான் பார்த்தேன். எனது நண்பன் கமலஹாசனை எவ்வளவு பாராட்டினாலும் அது பத்தாது. முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை படமாக எடுக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்து இப்படத்தை இயக்கியது மிக மிக அருமை.

இந்தியாவில் நாம் எத்தனையோ ராணுவ படங்களை பார்த்திருக்கின்றோம். ஆனால் இந்த படத்தை ராஜ்குமார் எடுத்த விதம் மிக மிக அருமை. ஒட்டுமொத்த படக்குழுவும் மிகச் சிறப்பாக வேலை செய்துள்ளது.

சிவகார்த்திகேயன் முகுந்த் கதாபாத்திரத்தை ஏற்று மிகச் சிறப்பாக நடித்துள்ளார் என்பதை காட்டிலும் வாழ்ந்துள்ளார் என்று சொல்ல வேண்டும். சிவகார்த்திகேயன் திரையுலக வாழ்க்கையிலே இப்படம் சிறப்பான படமாக இருக்கும். அதிலும் சாய்பல்லவி இந்து கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். படம் பார்த்து முடிக்கும் போது என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த படத்துக்கும் எனக்கும் மற்றொரு பர்சனல் டச் இருக்கின்றது.

எனது அண்ணன் நாகேஸ்வர ராவ் 14 ஆண்டுகள் ராணுவத்தில் இருந்தார். இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே போர் நடந்த போது அவரது முதுகெலும்பில் குண்டு பாய்ந்தது. அதன் பிறகு அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இந்த படத்தை பார்க்கும் போது அந்த பர்சனல் டச் உடன் படத்தை பார்த்தேன்.

அனைவரும் பார்க்க வேண்டிய படம். ராணுவ வீரர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை இப்ப படம் பார்த்தால் புரியும். அது மட்டும் இல்லாமல் இந்துவின் அப்பா கூறியது என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் இருந்த அவர் முகுந்த்தை ராணுவ உடையில் பார்த்ததும் ஒப்புக்கொண்டார். இந்த படத்தை எடுத்ததற்காக கமலஹாசன் மற்றும் படத்தை இயக்கிய ராஜ்குமார், மிகச் சிறப்பாக நடித்த சிவகார்த்திகேயன் என ஒட்டுமொத்த படக்குழுவையும் எவ்வளவு பாராட்டினாலும் போதாது என பேசியிருந்தார். நடிகர் ரஜினிகாந்த்-தின் இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.