தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் நடித்திருக்கும் இலியானா இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் மனதார வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அப்படி தெலுங்கில் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது பர்ஃபி படம் மூலம் பாலிவுட் சென்றார். அதன் பிறகு பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். மும்பையில் தங்கி தொடர்ந்து பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வருகிறார் இலியானா. டோலிவுட்டை போன்று பாலிவுட்டில் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை.
பர்ஃபி படம் பார்த்த அனைவரும் இலியானாவின் நடிப்பை பாராட்டினார்கள். அப்படிப்பட்ட இலியானா தனக்கு நடிக்க பிடிக்கவில்லை என்று அம்மாவிடம் சொன்னது உண்டு.முதல் படத்தில் நடித்தபோது தான், அம்மா நான் தொடர்ந்து நடிகையாக இருக்க விரும்பவில்லை என கூறியிருக்கிறார் இலியானா.
படப்பிடிப்பில் ஒரே பதட்டமாக இருக்குமா என்று தெரிவித்திருக்கிறார். அதை கேட்ட அம்மாவோ எல்லாம் சரியாகிவிடும் என இரவு 3 மணிக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். நடுச்சாமத்தில் அம்மா கொடுத்த அறிவுரையை என் வாழ்க்கையில் மறக்க முடியாது என்கிறார் இலியானா.
ileana, actress, cinima news ,kollywood.