கடந்த ஒரு மாதமாக அரசியல் பணிகளில் தீவிரமாக இருந்து வந்த விஜய் இன்றிலிருந்து அவருடைய கடைசி படமான தளபதி 69ஆவது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். பூஜை எல்லாம் போடப்பட்டு ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அவருடைய மாநாடு கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வந்தார் விஜய். நேற்று அவருடைய முதல் செயற்கழு கூட்டம் நடந்து முடிந்த நிலையில் அதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மீண்டும் தளபதி 69 ஆவது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார் விஜய். பொதுவாக எந்த ஒரு படமானாலும் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் அதனுடைய வியாபாரம் ஆரம்பிக்கும்.
ஆனால் தளபதி 69 ஆவது படத்தை பொருத்தவரைக்கும் இப்போதிலிருந்து அதனுடைய ஓவர்சீஸ் வியாபாரம் சூடு பிடித்து இருக்கிறது. துபாயை தலைமையிடமாக கொண்ட ஒரு பிரபல நிறுவனம் தளபதி 69 படத்தின் ஓவர்சீஸ் ரைட்சை 75 கோடிக்கு வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுவும் ஒரே பேமெண்டில் அந்த பணத்தை தளபதி 69 படத்தின் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து பெற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் ஓவர்சீஸ் வியாபாரத்தில் கிடைத்த பணத்தை வைத்து தான் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பையே நடத்தப் போவதாகவும் இன்னொரு பக்கம் செய்தி பரவிக் கொண்டிருக்கின்றது.
தளபதி 69 படத்தை கே வி என் ப்ரொடக்சன் தான் தயாரிக்கிறது. பல படங்களுக்கு இந்த தயாரிப்பு நிறுவனம்தான் பைனான்சும் செய்து வருகிறதாம். அப்படி இருக்க இவர்களிடம் எப்படி பணம் இல்லாமல் இருக்கும் என்ற ஒரு கேள்வியும் எழுந்து வருகிறது. ஏற்கனவே மதுரை அன்புச் செழியனிடம் கே வி என் நிறுவனம் பைனான்ஸ் கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அன்புச் செழியன் பணம் கொடுக்க மறுத்ததால் தளபதி 69 படத்தின் ஓவர் சீஸ் வியாபாரம் மூலம் வந்த அந்த பணத்தை வைத்து தான் இந்தப் படத்தை ஆரம்பிக்க போவதாக சொல்லப்படுகிறது. படத்திற்கான மீதமுள்ள செலவுக்கான பணத்தையும் வேறொரு நிறுவனத்திடம் பைனான்ஸ் பெற்றுக்கொண்டு நடத்தப் போவதாகவும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது.