ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அஜித் விதவிதமான ஸ்டைலில் நடித்து வரும் இப்படத்தின் மீது ரசிகர்களின் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருக்கிறது.
அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் ‘குட் பேட் அக்லி’ படத்தினை இயக்கி வருகிறார். இதனால் இப்படம் தரமான பேன் பாய் சம்பவமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் குட் பேட் அக்லியை தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஷுட்டிங் தற்போது மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ‘குட் பேட் அக்லி’ படம் குறித்து மரண மாஸ் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இப்படம் குறித்து பேசியுள்ள ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர், ‘குட் பேட் அக்லி’ பக்காவான கமர்ஷியல் படம். பில்லாவுக்கு பிறகு அஜித்தை வேறொரு ஸ்டைலில் பார்ப்பீர்கள் என தெரிவித்துள்ளார். இதனால் இப்படம் அஜித் ரசிகர்களுக்கு வேறலெவல் ட்ரீட்டாக அமையும் என்பது உறுதியாகியுள்ளது.
முன்னதாக ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து வரிசையாக புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. கையில் டாட்டூவுடன் டி-சர்ட் அணிந்து சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில், கோட் சூட் அணிந்து ஸ்டைலிஷ் லுக்கில், சால்ட் அன்ட் பெப்பரில் இல்லாமல் டை அடித்து யங் லுக்கில் ஏகே இருப்பதை போன்ற புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை எகிற வைத்தது. இந்த போட்டோஸில் அஜித்தின் லுக் பில்லா வைப்பில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடினர்.