தனக்கு இருக்கும் வாசகர் வட்டத்தை பயன்படுத்தி, அதனை நிமிடத்திற்கு நிமிடம் பணமாக மாற்றி, தனது பாக்கெட்டில் போட்டு நிரப்பி வரும் இந்த RJ-சந்துரு, தற்போது JVP கட்சியிடம் தன்னை அடகுவைத்து, JVP கட்சியின் ஊது குழலாக மாறியுள்ளார். இது எப்படி சிஸ்டமெட்டிக்காக நடக்கிறது என்று பாருங்கள்….
Rj Chandru என்னும் இந்த தனி நபர், கடந்த கொரோனா கால கட்டத்தில், வீட்டில் இருந்தபடி சில வீடியோக்களை வெளிவிட. வேலை இல்லாத சில… பல தமிழர்கள் அதனைப் பார்க்க. திடீரெனப் பெய்த மழையில் முளைத்த ஒரு காளான் தான் இந்த சந்துரு. அவர் வெளியிடும் வீடியோக்களை தமிழர்கள் பார்பதால், அவருக்கு YOUTUBE நிறுவனம், பல லட்சம் டாலர்களை மாதம் தோறும் வழங்கி வருகிறது. இது ஊர் அறிந்த உண்மை.
ஒட்டுமொத்தத்தில் ஒரு சமூக அக்கறையில், இவர் செயல்படவில்லை. தமிழர் என்ற பொறுப்புணர்வு கூட இவருக்கு இல்லை.. பணம் எங்கே கிடைத்தாலும், அதனை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறார். சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாயில், இவர் தமிழர்களுக்கு என்ன செய்தார் ? முதலில் அதனை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
அந்த வகையில் நேற்றைய தினம்(09) சந்துரு யாழ் சென்று, எடுத்த நேர்காணல் ஒன்றை வெளியிட்டுள்ளார். சாதாரணமாகப் பார்த்தால் அவர் ஏதோ மக்களை சந்தித்து பேட்டி எடுப்பது போலத் தோன்றும். ஆனால் அதில் பல உள்நோக்கங்கள், , ஒரு காய் நகர்த்தல், மக்களை திசை திருப்புவது என்று பல விடையங்கள் அடங்கியுள்ளது. பொதுவாகச் சொல்லப் போனால், JVP கட்சிக்கு வாக்குச் சேகரிக்கும் நோக்கில் இந்த மக்கள் பேட்டி வெளியாகியுள்ளது.
வட கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் அரசியல்வாதிகளையும் ஒரு துரோகி போலக் காட்டி. JVP கட்சியின் வேட்ப்பாளர்களை உயர்த்திப் பேசி, இந்த சந்துரு செய்திருக்கும் நேர்காணல் ஒரு வரலாற்றுத் துரோகம் ! பணப் பேராசையால் ஒரு தமிழ் இனத் துரோகியாக மாறிவிட்டார் இந்த RJ-சந்துரு… தமிழர்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட, ஏதுவான 13வது திருத்தச் சட்டத்தை அரசு அமுலுக்கு கொண்டுவரும் வேளை, உச்ச நீதிமன்றம் சென்று தடை உத்தரவை வாங்கியது இந்த JVP கட்சி. இன்றும் கூட, இலங்கையில் அதிகாரப் பரவலாக்கல் தேவை இல்லை என்று கூறுகிறார் அனுரா. இப்படி இருக்கையில், தமிழர்கள் எப்படி JVP கட்சிக்கு வாக்குகளை போடுவது ?
சரி ..தமிழர்கள் ஒரு JVP கட்சி வேட்ப்பாளரை தெரிவு செய்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அவர் பாராளுமன்றம் சென்று தமிழர்களின் உரிமைகளை பேசுவாரா ? இல்லை பேசத் தான் முடியுமா ? இல்லையே …. இது எப்படி இருக்கிறது என்றால், ஆட்டு குட்டியை பாதுகாக்க ஓநாயை காவலுக்கு விட்ட கதையாக அல்லவா இருக்கிறது.
YOUTUBEல் வாய் கிழியப் பேசி, தமிழர்களை ஏமாற்றி. அவர்கள் பார்பதால் வரும் கோடிக் கணக்கான ரூபாயை சுருட்டி. அதன் பின்னர் அரசியல் கட்சிகளிடமும் பணத்தைப் பெற்று, வயிறு வளர்க்கும் இது போன்ற ச(ந்)த்துருக்களை தமிழர்கள் இனியாவது இனம் கண்டு புறக்கணிக்கவேண்டும் ! இனியும் இவர், பேச்சை நம்பி ஏமாறவேண்டாம் தமிழர்களே… தமிழால் ஒன்றுபடுவோம்…