கத்தி, தெறி மற்றும் மெரிசல் படங்களுக்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 69 படத்தில் சமந்தா இணைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. முதல் முறையாக விஜய் மற்றும் இயக்குநர் ஹெச் வினோத் காம்போவில் உருவாகி வரும் அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் படம் தளபதி 69.
அரசியலில் களமிறங்கிய நிலையில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று விஜய் கூறிய நிலையில் இது அவரது கடைசி படமாக பார்க்கப்படுகிறது. ஆதலால், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இந்தப் படத்தை ஹிட் படமாக முடிக்காமல் வரலாற்றில் இடம் பிடிக்கும் ஒரு சரித்திர படமாக்க படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இதுவரையில் எந்த தமிழ் படமும் ரூ.1000 கோடி வசூல் குவிக்கவில்லை என்ற நிலையில் தளபதி 69 படம் ரூ.1000 கோடி வசூல் பட்டியலில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரைன், பிரியாமணி, மமிதா பைஜூ, மோனிஷா பிளெசி ஆகியோர் பலர் நடித்து வரும் நிலையில் தற்போது சமந்தாவும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக கத்தி, தெறி மற்றும் மெர்சல் ஆகிய ஹிட் படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கிறார். தற்போது 4ஆவது முறையாக தளபதி 69 படத்தில் இணைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. கடைசியாக 2022 ஆம் ஆண்டு காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற நேரடியான தமிழ் படத்தில் நடித்திருந்தார். சகுந்தலம் மற்றும் குஷி என்ற 2 தெலுங்கு படங்களில் நடித்திருந்தார். தற்போது இந்த ஆண்டில் ஒரு படத்தில் கூட சமந்தா நடிக்காத நிலையில் விஜய்யின் தளபதி 69 படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கம்பேக் கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. சமந்தா மற்றும் விஜய் படங்கள் எல்லாமே ஹிட் படங்களாகவே அமைந்துள்ளன. ஆதலால், சமந்தா இந்த படத்தில் இணைந்தால் இந்த படமும் ஹிட் படமாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. வரும் 2025 ஆம் ஆண்டு இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.
கேரளாவில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே தொடர்பான பாடல் காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் 2ஆம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு விஜய்க்கு ரூ.275 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பூஜா ஹெக்டேவிற்கு ரூ.6 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சமந்தாவிற்கு தற்போது மார்க்கெட் இல்லையென்றால் அவருக்கு ரூ.4 கோடி வரையில் சம்பளம் கொடுக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் திரைக்கு வந்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க அரசியல் பின்னணி கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் விஜய் அரசியல்வாதியாக நடிப்பதாக நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விஜய்க்கு இந்தப் படம் பிரச்சார மேடையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.