இலங்கையில் இன்று நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், பல மாவட்டங்களில் மக்கள் குறைந்த எண்ணிக்கையில் தமது வாக்குகளை செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தேர்தலோடு ஒப்பிடும்போது இம்முறை மக்கள் குறைவான எண்ணிக்கையில் வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது நாடு தழுவிய ரீதியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. புத்தளத்தில் 60% சத விகிதமும் , வவுனியாவில் 44% சத விகித வாக்குகள் என, சற்று குறைந்த எண்ணிக்கையில் தான் மக்கள் வாக்குகளை செலுத்தியுள்ளார்கள். மக்கள் இன்று நடந்த தேர்தலில் ஏன் அதிக அக்கறை காட்டவில்லை என்பது ஆச்சரியம் தான்.
இதேவேளை அனுரா குமார திசநாயக்க, 120 ஆசனங்களைக் கைப்பற்றி பெரும்பாண்மையோடு அரசை அமைப்பாரா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.