சர்வதேச அளவில் பெரும் தேடுதல் நடவடிக்கை ஒன்றை, பிரித்தானியப் பொலிசார் ஆரம்பித்துள்ளார்கள். பங்கச் என்று அழைக்கப்படும் இந்த இளைஞர் தனது மனைவியைக் கொலைசெய்து, ஒரு காரில் போட்டு, சுமார் 100 மைல் தொலைவு வரை காரை ஓட்டிச் சென்று, ILFORD என்னும் இடத்தில் விட்டுச் சென்றுவிட்டார். இவர் பிரிட்டனை விட்டும் தப்பிச் சென்றுவிட்டதாக பொலிசார் தற்போது தெரிவித்துள்ளார்கள்.
நவம்பர் மாதம் 13ம் திகதி , ஹர்ஷா என்ற பெண்ணைக் காணவில்லை என்று அவரது பெற்றோர்கள், நோத்-கம்பிரியாவில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து இருந்தார்கள். இதேவேளை அடுத்த நாள்(14) லண்டன் இல்பேட்டில் குறித்த காரினுள் இருந்து இந்தப் பெண்ணின் சடலத்தை பொலிசார் கைப்பற்றி உள்ளார்கள்.
கணவரிடம் விசாரணை நடத்தச் சென்ற இடத்தில், பங்கச் என்பவர் மறைந்துவிட்டார். அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், இலங்கை பாக்கிஸ்தான், மற்றும் இந்தியா என்று பல நாடுகளிடம் பிரிட்டன் பொலிசார் உதவிகோரியுள்ளார்கள்.