கேரளாவில் தயாரிக்கப்பட்டு, பின்னர் தமிழ் நாடு வந்து அங்கிருந்து, ராமேஸ்வரம் ஊடாக யாழ்பாணத்திற்கு கடத்தப்படுகிறது கேரள கஞ்சா. அது மட்டும் அல்ல A கிளாஸ் போதைப் பொருட்கள் கூட யாழில் கிடைக்கிறது. யாழ்ப்பாணம் என்பது இலங்கையின் போதைப் பொருள் தலைநகரமாக மாறியுள்ளது.
இன் நிலையில் தான் அனுரா அரசு பொறுப்பேற்ற பின்னர், நடந்த முதல் அதிரடி நடவடிக்கை இதுதான். இந்தியக் கடலில் இலங்கையின் எல்லைக்கு அப்பால் சென்ற இலங்கைக் கடல்படை, படகில் வந்த 54KG கஞ்சாவைக் கைப்பற்றி, அன் நபர்களையும் கைதுசெய்து இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
இந்தப் படகில் 5 பேர் இருந்துள்ளதாகவும் , இவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்றும் கூறப்படுகிறது. அதாவது அனுரா அரசு இந்தக் கடத்தல்காரர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை தெரியப்படுத்தியுள்ளார்கள் என்று தான் கூறவேண்டும்.