இலங்கையில் அமைச்சரவை நேற்று(18) பொறுப்பேற்ற சில மணி நேரங்களில், யாழ் கட்டளை தளபதிக்கு அனுராவிடம் இருந்து சில உத்தரவுகள் பறந்துள்ளது. தமிழர்களின் பூர்வீக நிலங்களை கைப்பற்றி, அங்கே பாரிய ராணுவ முகாம்களை அமைத்திருந்தது சிங்கள ராணுவம். அதிலும் குறிப்பாக பருத்தித்துறை மற்றும் கற்கோவளம் ஆகிய இடங்களில் உள்ள சில முகாம்கள், முற்றிலும் தனியாருக்கு சொந்தமான இடங்கள் ஆகும்.
இந்த இடங்களில் இருந்து ராணுவத்தை உடனே வெளியேறுமாறு, அனுரா நேற்று கட்டளை பிறப்பித்தார். இதனால் இன்று(19) ராணுவத்தினர் அங்கிருந்து விலக ஆரம்பித்துள்ளதாக நமக்கு செய்திகள் கிடைத்துள்ளது. இதேவேளை யாழ் மற்றும் சாவச்சேரி பகுதிகள் இருந்த சில சோதனைச் சாவடிகளையும் ராணுவம் உடனடியாக அகற்றியுள்ளது.
இந்த மாற்றங்களால் யாழ் தமிழர்கள் மட்டும் அல்ல புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் அனுராவுக்கு வரவேற்ப்பு ஒன்று உருவாகி வருகிறது. ஆனால் எப்படி நம்புவது என்ற கேள்விகளும் மேலேங்கியுள்ளது. எதனையும் பொறுத்து இருந்து தான் பார்கவேண்டும்.