இன்று (20) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிய பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் வாக்குமூலம் கொடுத்துவிட்டு 5 மணி நேர வீசாரணையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோவை பிரித்தானிய சேனல்௪ கடந்த ஆண்டு ஜூன் 8ஆம் திகதி ஒளிபரப்பியது. சுமார் 50 நிமிடங்கள் ஒளிபரப்பான குறித்த காணொளியில், சுவிட்சர்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் அணியின் ஊடகப் பேச்சாளரான அசாத் மௌலானா என்பவரே இந்த தகவலை முன்வைத்துள்ளார். இது இவ்வாறு இருக்க, முன் நாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பார் வைக்க லைசன்ஸ் வழங்கியமை தொடர்பில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளது. இது ரணில் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகள் ஆகும். இதனை இதனையும் பொலிசார் விசாரிக்க உள்ளார்கள். தற்போது தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்கள் , அடிக்கடி ஒரு தமிழ் வார்த்தையை கூறி வருகிறார்கள். அது என்னவென்றால் “அனுரா அலை” இது நல்லது செய்யுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.