இம்பாலா: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் குக்கி மற்றும் மெய்தி இடையே வன்முறை வெடித்துள்ளது. நிவாரண முகாமில் இருந்து மாயமான 6 பேரின் சடலங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட நிலையில், அவர்களின் பிரேத பரிசோதனை முடிவுகள் இப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த ஓராண்டிற்கும் மேலாகவே வன்முறை தொடர்ந்து வருகிறது. இடையில் சில மாதங்கள் வன்முறை சற்று கட்டுக்குள் வந்த நிலையில், இப்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
சடலமாக மீட்பு: அங்குக் குக்கி மற்றும் மெய்தி பிரிவினருக்கு இடையே தான் மோதல் வெடித்துள்ளது. சமீபத்தில் குக்கி ஆயுத குழுவுக்கும் பாதுகாப்புப் படைக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, அங்குள்ள நிவாரண முகாமில் இருந்து பெண்கள், குழந்தைகள் 6 பேர் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்த நிலையில், அவர்கள் அங்குள்ள பராக் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் சிதைந்த நிலையில் எல் சிங்கிங்கன்பா சிங் என்ற மூன்று வயதுக் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதுவே அங்கு வன்முறை மீண்டும் வெடிக்கக் காரணமாக இருக்கிறது. இதற்கிடையே அந்த குழந்தையின் தாய் உட்பட மேலும் ஐந்து குடும்ப உறுப்பினர்கள் வனப்பகுதியில் அமர்ந்து இருப்பது போன்ற படமும் இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. பிங்க் டி-ஷர்ட்டில் சிங்கிங்கன்பா சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் காட்டுப் பகுதியில் அமர்ந்துள்ளது அந்த போட்டோவில் தெளிவாகத் தெரிகிறது.
பிரேதப் பரிசோதனை முடிவுகள்: அந்த குடும்பத்தினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இவர்கள் அனைவரும் மெய்தி பிரிவைச் சேர்ந்தவர்களாகும்.
அந்த மூன்று வயதுக் குழந்தையின் மண்டை ஓட்டில் குண்டுக் காயம் இருப்பதாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையின் மார்பில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள் உள்ளன. முன்கை மற்றும் உடலின் பிற பகுதிகளிலும் காயங்கள் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.. அவரது வலது கண் காணவில்லை எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயங்கள்: அவரது தாயார் எல் ஹெய்டோன்பி தேவியின் (25) பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது மார்பில் மூன்று குண்டுக் காயங்களும், பின்புறத்தில் ஒரு குண்டுக் காயங்களும் உள்ளன. 60 வயதான அவரது பாட்டி ஒய் ராணி தேவிக்கு மண்டை ஓட்டில் ஒன்று, மார்பில் இரண்டு, அடிவயிற்றில் ஒன்று மற்றும் கையில் ஐந்து குண்டுக் காயங்கள் உள்ளன. இருவரின் உடலிலும் பல பாகங்களில் ஆழமான காயங்கள் இருப்பதாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஷாக்: குடும்பத்தினர் மற்ற மூன்று பேரின் பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட் போலீசாரிடம் உள்ளன.. அது தொடர்பான தகவல்கள் எதுவும் இப்போது வரை வெளியாகவில்லை. இந்த கொடூர சம்பவத்தில் மற்றொரு எட்டு மாத கைக்குழந்தை லங்காம்பா சிங், அவரது சகோதரி, டி தாஜமன்பி தேவி (8) அவர்களின் தாய் சகோதரி டி தோய்பி தேவி (31) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஷாக்: குடும்பத்தினர் மற்ற மூன்று பேரின் பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட் போலீசாரிடம் உள்ளன.. அது தொடர்பான தகவல்கள் எதுவும் இப்போது வரை வெளியாகவில்லை. இந்த கொடூர சம்பவத்தில் மற்றொரு எட்டு மாத கைக்குழந்தை லங்காம்பா சிங், அவரது சகோதரி, டி தாஜமன்பி தேவி (8) அவர்களின் தாய் சகோதரி டி தோய்பி தேவி (31) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.