காரில் இருந்து இறங்கிப் போய் நபரை தாக்கிய அர்ச்சுணா MP- கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு !

காரில் இருந்து இறங்கிப் போய் நபரை தாக்கிய அர்ச்சுணா MP-  கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு !

2021ஆம் ஆண்டு பேஸ்லைன் வீதியில் , அர்ச்சுணா காரில் சென்றுகொண்டு இருந்தவேளை, ஒரு மோட்டார் சைக்கிளோடு மோதிவிட்டார். ஆனால் மோட்டார் சைக்கிள் நபரில் தான் பிழை என்று, கூச்சல் போட்டுக்கொண்டு இறங்கிய அர்ச்சுணா அவரை சரமாரியாக தாக்கியும் உள்ளார். இதனால் பொலிசார் வழக்கு ஒன்றை பதிவுசெய்து இருந்தார்கள். இன் நிலையில் பல முறை நீதிமன்றம் செல்லாமல் அர்ச்சுணா டிமிக்கி கொடுத்து வந்தார்.

இதனை அடுத்து நேற்றைய கடந்த 26ம் திகதி, கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க அர்ச்சுணாவை கைதுசெய்ய யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிடியாணை ஒன்றைப் பிறப்பித்தார். அர்ச்சுணா தனது சட்டத்தரணி ஊடாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியதை அடுத்து , நேற்று(28)ம் திகதி இந்த பிடியாணை தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.