அசாத் அரசாங்கத்தை பதவியிலிருந்த அகற்றிய சிரிய கிளர்ச்சியாளர்களின் எதிர்காலம் என்ன?

அசாத் அரசாங்கத்தை பதவியிலிருந்த அகற்றிய சிரிய கிளர்ச்சியாளர்களின் எதிர்காலம் என்ன?

சிரியாவில் பசார் அல் அசாத் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றிய கிளர்ச்சிக்குழு கலைக்கப்படும் என அந்த குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சிரிய கிளர்ச்சிகுழு கலைக்கப்படும் அதன் உறுப்பினர்கள் சிரிய இராணுவத்தில் இணைக்கப்படுவார்கள் என எச்டிஎஸ் அமைப்பின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார்.

அனைவரும் சட்டத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் பல்லின சமூகத்தை கொண்ட நாட்டில் ஐக்கியம் ஏற்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சிரியா ஐக்கிய தேசமாக தொடரவேண்டும் என தெரிவித்துள்ள அவர் சமூக நீதி நிலவவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சிரிய அகதிகள் மீண்டும் தாயகம் திரும்பவேண்டும் என்றால் சிரியா மீதான சர்வதேச தடைகள் நீங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.