நகைச்சுவை நடிகர் போண்டா மணி மறைவுக்கு முக்கியமான காரணமே இதுதான் என்று பயில்வான் ரங்கநாதன் தனது வேதனை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட போண்டா மணி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 2 மாதம் சிகிச்சை பெற்றார். 2 சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் பதிவு செய்திருந்தார்.
வறுமையில் இருந்த போண்டா மணிக்கு திரைப்பிரபலங்கள் பலர் உதவி செய்த நிலையில் நேற்று உயிரிழந்தார். போண்டா மணியின் குடும்பத்திற்கு விஜயகாந்த் சார்பில் மறைந்த நடிகர் போண்டா மணியின் மனைவியிடம் நடிகர் மீசை ராஜேந்திரன், சாரப்பாம்பு சுப்புராஜ் ஆகியோர் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தனர். இந்நிலையில்,பயில்வான் ரங்கநாதன் யூடியூவில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், என் அருமை நண்பர் போண்டா மணி இன்று நம்மோடு இல்லை. என்னுடன் நெருங்கி பழகிய நண்பர்களில் போண்டா மணியும் ஒருவர். இலங்கை அகதியாக வந்த போண்டா மணிக்கு இப்போது வரைக்கும் பாஸ்போர்ட் இல்லை. இலங்கையில் இவர் பிறந்து இருந்தாலும், இவர் தமிழ் மீது தீராத பற்று கொண்டவராக இருந்தார்.
பல படத்தில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருந்த போண்டா மணிக்கு பணத்தை சம்பாதிக்க தெரிந்த அளவுக்கு சேர்த்துவைக்க தெரியாதவராக இருந்து இருக்கிறார்.எந்தவிதமான கெட்டப்பழக்கமும் இல்லாத போண்டா மணிக்கு கடந்த ஆண்டு இரண்டு கிட்னியும் செயல் இழந்துவிட்டது. இதனால், மாததற்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிசிஸ் செய்து வரும் இவருக்கு நேற்று காலை டயாலிசிஸ் செய்ய வேண்டி இருந்தது. அதனை செய்யக் கூட பணம் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்து விட்டார் என்று பயில்வான் கூறியுள்ளார்.