சிவகார்த்திகேயனைத் தவிர டாப் ஹீரோக்களை கவர்ந்த நடிகை..

சிவகார்த்திகேயனைத் தவிர டாப் ஹீரோக்களை கவர்ந்த நடிகை..

பொதுவாக சினிமாத்துறையில் வரக்கூடிய படங்கள் அனைத்தும் ஹீரோகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கான கதையாக தான் இருக்கும். ஆனால் தற்போதைய காலத்தில் இது கொஞ்சம் கொஞ்சமாக மாறி ஹீரோயின் சப்ஜெக்ட் நிறைந்த கதையாகவும் வருகிறது. அந்த வகையில் சில முன்னணி நடிகைகள் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய உயரத்திற்கு போய்விட்டார்கள்.

அப்படி இருக்கும் ஒரு சில நடிகைகள் டாப் ஹீரோக்கள் படங்களில் நடித்து அவர்களுடைய தனித்துவமான நடிப்புகளை காட்டியிருக்கிறார்கள். ஆனால் இதுவரை சிவகார்த்திகேயனுக்கு மட்டும் ஜோடி போட்டு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. ஒருவேளை இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தால் அந்த காம்பினேஷன் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாத அளவிற்கு இரண்டு பேரின் பொருத்தமும் மேட்சிங் ஆக இல்லை.

அந்த நடிகை வேறு யாருமில்லை, தற்போது இவர் இல்லாத படங்களை இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப செகண்ட் இன்னிங்ஸை கெட்டியாக பிடித்து வரும் த்ரிஷா. இவர் ஜீவாக்கு ஜோடியாக என்றென்றும் புன்னகை, ஜெயம் ரவிக்கு ஜோடியாக உனக்கும் எனக்கும், சகலகலா வல்லவன் படங்களிலும், கார்த்திக்கு ஜோடியாக பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாகவும் நடித்து விட்டார்.

அடுத்ததாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 96, தனுசுக்கு ஜோடியாக கொடி படத்திலும், சிம்புக்கு ஜோடியாக அலை, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களிலும், விக்ரமுக்கு ஜோடியாக பீமா மற்றும் சாமி படத்திலும், சூர்யாவுக்கு ஜோடியாக மௌனம் பேசியதே, ஆயுத எழுத்து மற்றும் ஆறு போன்ற படங்களிலும் ஜோடியாக நடித்து விட்டார்.

மேலும் அஜித்துக்கு ஜோடியாக கிரீடம், ஜி, மங்காத்தா, என்னை அறிந்தால் போன்ற நான்கு படங்களையும் தொடர்ந்து தற்போது விடாமுயற்சி படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதே மாதிரி விஜய்க்கு ஜோடியாக கில்லி, குருவி, ஆதி, திருப்பாச்சி மற்றும் லியோ படங்களிலும் ஜோடியாக இணைந்து விட்டார்.

அடுத்ததாக கமலின் தூங்க வனம் படத்திலும், ரஜினிக்கு பேட்ட படத்திலும் நடித்திருக்கிறார். இப்படி முன்னணி நடிகர்களாக இருக்கும் அனைத்து நடிகைகளுக்கும் ஜோடி போட்டு நடித்து டாப் ஹீரோயின் என்கிற இடத்திற்கு போய்விட்டார். அப்படிப்பட்ட இவர் தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் இன்னும் ஜோடி சேராமல் இருக்கிறார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *