FALCON- 900 என்ற மிகவும் பாதுகாப்பான ராணுவ தனியார் விமானத்தில் பிரித்தானிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பறந்த வேளை. சுமார் 30 நிமிடங்களாக எந்த ஒரு தொடர்பாடலையும் ஏற்படுத்த முடியவில்லை என்றும், GPS கருவிகள் செயல் இழந்ததாகவும் விமானி தெரிவித்துள்ளார். பிரித்தானிய பாதுகாப்பு துறை அமைச்சர், கிரான்ட் ஷப்ஸ், சற்று முன்னர் உக்ரைனில் இருந்து RAF நோத் ஹால்ட் விமான நிலையம் நோக்கி ராணுவ தரம் வாய்ந்த தனியார் விமானத்தில் வந்துகொண்டு இருந்தார்.
போலந்து நாட்டு வான் எல்லையில் வைத்து, அவரது விமான கம்பியூட்டர் ஹக் செய்யப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொடர்பாடலையும் விமானம் இழந்த நிலையில், உள்ளே இருந்த GPS கருவிகளும் இயங்கவில்லை. விமானம் தொடர்பை இழந்ததால், விழித்துக் கொண்ட பிரித்தானிய வான் படை அவசரமாக டைஃபு போர் விமானங்களை போலந்து நோக்கிப் பறக்க கட்டளையை பிறப்பித்தது. இன்று சில மணி நேரத்திற்கு முன்னர் பெரும் களோபர நிலை தோன்றியுள்ளது என்று தான் கூறவேண்டும்.
விமானம் தொடர்பில் இல்லை என்ற செய்தி அவசரமாக பிரித்தானிய பிரதமர், ரிஷி சுண்ணக்கிற்கு அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சு அடுத்து என்ன செய்வது என்பது தொடர்பாக, கூட்டத்தை கூட்ட இருந்தது. அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் கூட எழுந்தது. இன் நிலையில் மீண்டும் 30 நிமிடங்கள் கழித்து விமானத்தின் கம்பியூட்டர்கள் அனைத்தும் மீண்டும் திடீரென சரியாகிவிட்டது. ரஷ்ய அரசின் ஹக்கர்கள், இதனைச் செய்துள்ளதாக, விமானி குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைனுக்குள் வெளிநாட்டு அமைச்சர் வந்தால், திரும்பச் செல்லும் போது என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் என்று ஒரு காட்டு காடியுள்ளது ரஷ்யா !
உண்மையில் இந்தச் செயல், பிரித்தானியாவை அதிரச் செய்துள்ள விடையம். இதற்கு பிரித்தானியா எந்த வகையில் திருப்பி அடிக்கும் என்பது தெரியவில்லை. இருப்பினும் மிகவும் மோசமான முறையில் ரஷ்யா தற்போது நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் தான் ரஷ்யா தனது சூப்பர் சோனிக் ஏவுகணைகளை பாவித்து உக்ரைன் நாட்டில் உள்ள அமெரிக்க ஏவு தளங்கள் இரண்டை நாசம் செய்ததும் குறிப்பிடத்தக்க விடையம் !