ஐஸ்லாந்தில் உள்ள மிகப்பெரிய எரிமலை வெடித்துள்ளது. பல்லாயிரம் அடிகளுக்கு மேல் அதன் புகை பரவி வருகிறது. இதன் காரணத்தால் பல ஐரோப்பிய விமானங்கள் தமது பாதையை மாற்றவேண்டிய சூழ் நிலையில் உள்ளது. இது இவ்வாறு இருக்க, எரிமலை வெடிப்பில் இருந்து SO2 என்று சொல்லப்படும் சல்பர் டை- ஆக்ஸைட் பெரும் அளவில் வெளியாகிக் கொண்டு இருக்கிறது.
ஐலாந்தில் உள்ள Reykjanes peninsula என்னும் இடத்தில் தான் இந்த மிகப்பெரிய எரிமலை உள்ளது. அங்குள்ள விடுதி ஒன்றில் வேலை பார்க்கும் நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். SO2 வாயுவை அதிகம் சுவாசித்து அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது இவ்வாறு இருக்க குறித்த சல்பர் டை ஆக்ஸைட் வாயு தற்போது, ஐரோப்பா நோக்கி நகர்த்து வந்து லண்டனிலும் காற்றில் கலந்து கீழே வந்து விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் மிகக்குறைந்த அளவில் இது காற்றில் காணப்படுவதால். மனிதர்களுக்கு கேடு எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் பிரித்தானிய அரசு இது தொடர்பாக எச்சரிக்கையோடு இருப்பதாக அறிவித்துள்ளது.