கடந்த 2004ம் ஆண்டு பொலிசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சந்தணக் கடத்தல் வீரப்பனுக்கு 2 மகள்கள் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் வித்யா ராணி. மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவர் என்பதனால், அவரை பஜகவில் இணைத்துக் கொண்டார்கள். ஆனால் அவரை மக்கள் செல்வாக்கு கிடைக்கும் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தி வந்த பஜக, அவருக்கு எந்த ஒரு நல்ல பதவியையும் கொடுக்கவில்லை. நடைபெறவுள்ள நாடாளுமன்ற, தேர்தலில் அவரை நிலை நிறுத்த பஜக தயாராகவும் இல்லை.
இன் நிலையில் , நாம் தமிழர் கட்சியின் தலைவர், சீமான் அவர்கள் பஜக வுடன் ரகசி பேச்சில் ஈடுபட்டுள்ளார் என்ற செய்தி சமூக வலையத்தளங்களில் பரவியது. பலர் பல்வேறு விதமான கருத்துகளை முன்வைத்தார்கள். இன் நிலையில் திடீரென வித்யா ராணி தான் , நாம் தமிழர் கட்சியில் இணைந்து விட்டதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட, சீமான் அனுமதிகொடுத்தார். அந்த தொகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்க பெண்மணியாக இருப்பவர் வீரப்பனின் மகள் வித்யா ராணி தான்.
இதனால் பஜக வுக்கு பெரும் சம்மட்டி அடி விழுந்துள்ளது. கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் வித்யா ராணிக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளது. இதனூடாக நாம் தமிழர் கட்சியில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினராவது தெரிவாகலாம் என்ற நிலை தோன்றியுள்ளது.
இது பஜக அண்ணாமலைக்கு விழுந்துள்ள பேரிடியாகும். ஓடி ஓடி பஜகவுக்கு ஆட்களைச் சேர்த்து வந்தார் அண்ணாமலை. ஆனால் சொந்தக் கட்சியில் உள்ளே இருந்த பெரும் செல்வாக்கு மிக்க பெண்மனியை கவனிக்க மறந்துவிட்டார். இதனால் இனி என்ன எல்லாம் நிகழப்போகிறதோ ?