உக்ரைன் போரில் ரஷ்யா வென்று விட்டதா ? மெதுவாக இடங்களை கைப்பற்றும் ரஷ்யப் படைகள் !

உக்ரைன்

2022ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தவேளை, அமெரிக்கா பல உதவிகளை புரிந்தது. அத்தோடு பல ஐரோப்பிய நாடுகளும் ஆயுதங்களை கொடுத்து உதவினார்கள். அதன் பின்னர் அமெரிக்கா, பல ஆயுதங்களை கொடுப்போம் என்று உக்ரைனுக்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்கியது. இதனால் ரஷ்யா பிடித்த நகரங்களை மீண்டும் தாக்கி கைப்பற்றியது உக்ரைன். ஆனால் தற்போது பல மாதங்களாக அமெரிக்கா தொடக்கம் மீதம் உள்ள ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்திவிட்டது.

இன் நிலையில் 33,000 ஆயிரம் உக்ரைன் ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும் சொல்லப் போனால் ரஷ்யா மிகவும் மெதுவாக முன்னேறி வருகிறது. இதனை தடுத்து நிறுத்த உக்ரைனிடம் மேலதிக ஆயுதங்கள் எதுவும் இல்லை. நேற்றைய தினம்(30) அமெரிக்க ஜனாதிபதி பைடனை தொடர்புகொண்ட உக்ரைன் அதிபர், உங்களிடம் இருந்து ஆயுதம் வரவில்லை என்றால், நாம் பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார். உங்களிடம் கெஞ்சிக் கேட்க்கிறேன் ஆயுதங்களை தாருங்கள் என்று அதிபர் மன்றாடி உள்ளார்.

ஆனால் அமெரிக்க செனட் சபை இதற்கு இன்னும் ஒப்புதல் கொடுக்கவில்லை. ஏன் எனில் அமெரிக்க சென்ட சபையில் பைடன் கட்சிக்கு எதிரான கட்சியினரே அதிக அளவில் உள்ளார்கள் உள்ளார்கள். இதனால் பைடன் கொண்டு வந்த திட்டத்தை அவர்கள், சம்மதிக்க மறுத்து வருகிறார்கள். இது உள்ளூர் அரசியல். ஆனால் உக்ரைன் மக்களை இது ஏன் பாதிக்கவேண்டும்? உங்கள் உள்ளூர் பிரச்சனையில் எங்களை பலிகிடா ஆக்கவேண்டாம் என்று செனட் சபைக்கு உக்ரைன் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.