பொதுவாக இதமான சூட்டில் உள்ள தண்ணீரில் வசிக்கும் இந்த அமீபா, அந்த நீரை நாம் பருகினால் நாசி வழியாக மூளைக்குச் சென்று, மூளையை கொஞ்சம் கொஞ்சமாக உண்டு, கடைசியில் மனிதரைக் கொல்கிறது. இந்த அமீபா ஒருவருக்கு தொற்றினால் 99% சத விகிதம் இறப்பு என்பது உறுதி. கடந்த 30 ஆண்டு காலமாக இந்த அமீபாவை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று உயிரியல் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். ஆனால் மருந்து கண்டு பிடிப்பதில் தோல்வியைத் தான் தழுவியுள்ளார்கள்.
அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்களில் உள்ள ஏரிகள், குளம் மற்றும் சில வெப்பமான கடல்களில் மட்டுமே இது உயிர்வாழும். குளிர் பகுதியில் இந்த அமீபா உடனே இறந்துவிடும். அதிக வெப்பத்திலும் வாழாது அதிக குளிரிலும் இதனால் உயிர் வாழ முடியாது. இதமான வெப்பம் தேவை. ஆனால் தற்போது உலக வெப்பமடைதல் காரணமாக, பிரித்தானியா கடல் நீர் இதமான சூட்டுக்கு மாறி வருகிறது. இதனால் இந்த அமீபா, கடல் நிருடன் சேர்ந்து பிரித்தானியாவுக்குள் வரக் கூடும் என்ற அச்சம் தோன்றியுள்ளது.
இதன் காரணத்தால் பிரித்தானிய உயிரியல் விஞ்ஞானிகள் கடல் நீரை பரிசோதனை செய்து வருகிறார்கள். மனித குலத்தை முற்றாக அழிக்கக் கூடிய ஒரு அமீபாவாக இது உள்ளது. விண் கல் விழுந்து உலகம் அழியப் போவது இல்லை. ஆனால் உலகில் உள்ள மிக முக்கியமான மனிதனின் எதிரியாக இந்த அமீபா தான் இருக்கிறது. இதன் பெயரைக் கேட்டாலே விஞ்ஞானிகள் அலறியடிப்பார்கள். அந்த அளவு கொடூரமானது. மனித மூளைக்குள் இந்த அமீபா சென்றதும்.
முதலில் தலை வலி ஏற்படும், பின்னர் வாந்தி , ஜுரம் ஏற்படும் அதன் பின்னர் நாளடைவில் எழுந்து நிற்க்க முடியாத நிலை தோன்றும், அதன் பின்னர் ஞாபக சக்தியை இழந்து படிப்படியாக இறப்பு நேரிடும். இதேவேளை தொண்டை பகுதி இறுகி கல்லாம மாறிவிடும். இதனால் உணவையும் உண்ண முடியாத கோரமான நிலை தோன்றும். பச்சைப் பசேல் என ஒரு காலத்தில் இருந்த நமது பூமியை , தோண்டி கலன் கலனாக மசகெண்ணையை எடுத்து. அதனை எரித்து காபனீர் ஆக்சைட்டை உருவாக்கி, அதனூடாக ஓசூன் படலத்தை அழித்து. அதிக சூரிய ஒளியை பூமிக்குள் விட்டதே மனிதன் தான். இதனால் உலகம் வெப்படைய ஆரம்பித்து, தற்போது வட மற்றும் தென் துருவங்கள் கூட உருகும் நிலை தோன்றியுள்ளது.