ஆடு ஜீவிதம் படத்தில் ஆடு கூட நடிச்சிருக்கு என்கிறார் ப்ளூ சட்டை மாறன்.. ஆனால் கதை நல்லா இல்லையாம் !

ஆடு ஜீவிதம் படத்தில் ஆடு கூட நடிச்சிருக்கு என்கிறார் ப்ளூ சட்டை மாறன்.. ஆனால் கதை நல்லா இல்லையாம் !

பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி தற்போது சக்கைப் போடு போட்டுக்கொண்டு இருக்கும் படம் தான், “ஆடு ஜீவிதம்” சில கோடிகளில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தற்போது 100 கோடி வசூலை அள்ளிக் குவித்துள்ளது. தமிழ் தெலுங்கு மலையாளம் என்று மூன்று மொழிகளில் வெளியாகி, நல்ல வரவேற்ப்பை இந்தப் படம் பெற்றுள்ள நிலையில். இந்தப் படம் தொடர்பாக ரிவியூ கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

முதலில் நடிகர்கள் அனைவரும் நேர்த்தியாக நடித்துள்ளார்கள், என்று கூறியுள்ள அவர். அந்தப் படத்தில் ஆடு கூட நல்லா நடித்திருக்கு என்று எல்லாம் ஆலாபனை பாடி. கடைசியாக படம் அவ்வளவாக நல்லா இல்லை என்று கூறி முடித்துள்ளார். படத்துடன் எம்மால் பயணிக்க முடியவில்லை என்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

அட எந்தப் படத்தை எடுத்தாலும் அதில் குறைகளை மட்டுமே கண்டு பிடித்து அதனைச் சொல்லியே பெரும் பணம் சம்பாதிக்கிறார் இந்த ப்ளூ சட்டை மாறன். ஆனால் இவர் ஒரு படு பிளாஃப்பான படத்தை எடுத்து பெரும் நஷ்டப்பட்டார் என்பது பலருக்குத் தெரியாது. அது பற்றி விமர்சிப்பது என்றால்… போதும் போதும் என்றாகிவிடும்.