அரச தலைவர் கோட்டாபயவை பதவி விலகுமாறு கோரி அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நிரந்தரமாக முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருிகின்றன.
போராட்டக்காரர்களுக்காக அங்கு ஏற்கனவே தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தற்போது தற்காலிக கழிப்பறை வசதிகள், ஓய்வு வசதிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளன.
போராட்டக்காரர்களுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்குவதற்காக தற்காலிக கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.