ஸ்ரீதேவிக்கு வளைகாப்பு… வாழ்த்த வந்த விஜய் மனைவி – புகைப்படம் இதோ!

ஸ்ரீதேவிக்கு வளைகாப்பு… வாழ்த்த வந்த விஜய் மனைவி – புகைப்படம் இதோ!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் கொண்டு இருந்தவர் ஸ்ரீதேவி. இவர் ரிக்ஷா மாமா திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒரு சில திரைப்படங்களில் 90ஸ் காலத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

பின்னர் காதல் வைரஸ் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயின் ஆக அறிமுகமாகி பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதை கண்டேன் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்து புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார். இவர் பிரபல மூத்த நடிகர் ஆன விஜயகுமாரின் மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்நிலையில் ஸ்ரீதேவி விஜயகுமார் ராகுல் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் ஸ்ரீதேவி விஜயகுமாரின் வளைகாப்பின் போது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அவரின் வளைகாப்பு விழாவுக்கு விஜய்யின் மனைவி சங்கீதா நேரில் சென்று வாழ்த்தியிருக்கும் புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகிறது. பல வருடங்களுக்கு முன்னெடுத்துக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.